Type to search

சிறையில் அடைக்கப்படும் பிக்பாஸ் போட்டியாளர்! – காரணம் என்ன?

Tamil nadu

சிறையில் அடைக்கப்படும் பிக்பாஸ் போட்டியாளர்! – காரணம் என்ன?

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பிக்பாஸ் வீட்டில் சிறைக்கு செல்லப்போகும் முதல் நபரின் பெயரை இன்று அறிவிக்கவுள்ளனர்.bigboss2 rival prison reason?

கடந்த முறை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சற்று மாறுபட்டு இந்த முறை புதிய கான்செப்டை பிக்பாஸ் குழுவினர் அறிமுகப்படுத்தி இருந்தனர். அதற்காக அமைக்கப்பட்டது தான் பிக்பாஸ் ஜெயில்.

புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த ஜெயிலில் ஒரு இரும்புக் கட்டில், வெளிச்சத்துக்கு ஒரு லைட் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இதில் மெத்தை, போர்வை, ஏசி, ஃபேன் எதுவும் இருக்காது. பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்பவர்களுக்கும், டாஸ்க்கை செய்யாமல் இருப்பவர்களும் இந்த சிறையில் அடைக்கப்படுவர்.

இந்நிலையில் 3 – வது வார இறுதியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிலுக்கு செல்லும் வீட்டின் நபரை தேர்ந்தெடுக்கும் உரிமை அனந்த் வைத்தியநாதன் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் ஜெயிலுக்குள் ஒருவர் செல்ல இருக்கிறார் என்பதை பிக்பாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

ஷாரிக் வயதுக்கோளாறு காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் சேட்டை செய்கிறார் என்று சக போட்டியாளர்கள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், அவர் சிறை செல்வாரா? என்ற கேள்வி பார்வையாளர்களின் மனதில் எழுந்துள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: