Type to search

கூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர்! – ​1.2 கோடி ரூபாய் சம்பளம்!

INDIA

கூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர்! – ​1.2 கோடி ரூபாய் சம்பளம்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

படித்து முடிக்கும் போதே 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில், அதுவும் ஐடி நிறுவனங்களில் முதன்மையான கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பெங்களூரு மாணவர் ஒருவர்.bangalore IIT student selected google – rs.1.2 crore salary

ஆதித்யா பலிவர் (வயது 22), மும்பையச் சேர்ந்த இவர், கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷனல் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் (IIT-B) Integrated M.Tech என்ற 5 ஆண்டு படிப்பை (2013 – 18) படித்தார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி குறித்த ஒரு தேர்வை நடத்தியது. இதில் உலகம் முழுவதுமிலிருந்து 6,000 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அத்தேர்வில் சிறந்து விளங்கிய 50 மாணவர்கள் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஒரு வருட காலம் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் ஆதித்யா பலிவரும் ஒருவராவார்.

1.2 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் அவருக்கு கிடைக்கும். ஒரு வருடம் கழித்து மேற்படிப்பிற்காக அப்பணியில் இருந்து வெளியேறலாம் அல்லது நிரந்தமாக அப்பணியை தொடரலாம்.

வரும் ஜூலை 16ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் ஆதித்யா பணியில் சேர உள்ளார்.

உலகம் முழுவதுமிலிருந்து அங்கு பணியாற்றும் ஆராய்சியாளர்களுடன் தானும் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பது பெருமையாக உள்ளதாக ஆதித்யா குறிப்பிட்டுள்ளார்.

ஆதித்யாவை போல மேலும் 4 மாணவர்கள் இந்தியாவில் இருந்து இப்பணிக்கு தேர்வாகியுள்ளனர். மும்பை, சென்னை, ரூர்கீ மற்றும் ஹைதராபாத் ஐஐடிக்களில் படித்த மாணவர்களில் தலா ஒருவரும் கூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: