Type to search

​18 பேரால் 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஏழை மாணவி!

INDIA CRIME

​18 பேரால் 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஏழை மாணவி!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

{ Poor student sexually abused 7 months }

பீகாரில் 10-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவி ஒருவர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 18 பேரால், 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரன் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அந்த மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சக மாணவர்கள், அதனை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த வீடியோ சக மாணவர்களுக்கு பரப்பப்பட்டதாகவும், இதை அறிந்து கொண்ட தலைமை ஆசிரியர், மேலும் சில ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்காமல், பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக முதல் தகவலறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வீடியோ பலரிடம் பரவியதை அடுத்து மொத்தம் 18 பேரால் மிரட்டப்பட்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை 127 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: Poor student sexually abused 7 months

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags:

You Might also Like