Type to search

விஜய் மல்லையாவின் லண்டன் சொத்துக்கள் முடக்கம் : லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு!

INDIA

விஜய் மல்லையாவின் லண்டன் சொத்துக்கள் முடக்கம் : லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

{ Vijay Mallya’ London assets freezing }

வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக லண்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.

வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து நீதிமன்றத்தின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு விசாரணையில், லண்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிட்டிருந்த நிலையில் இதனை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் மல்லையாவிற்கு சொந்தமான 159 சொத்துக்கள் இனங்காணப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீசார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் உள்ள சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நேரில் ஆஜராக கோரி பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் இந்திய நீதித்துறைக்கு பூச்சாண்டி காட்டி வருகின்றார் தொழிலதிபர் விஜய் மல்லையா.

Tags: Vijay Mallya’ London assets freezing

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags:

You Might also Like