Type to search

2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: அரசாணை வெளியீடு!

Uncategorized

2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: அரசாணை வெளியீடு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

{ Plastic consumption Tamil Nadu }

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5-ம் திகதி அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் திகதி உலகம் முழுவதும் பிளாஸ்டிக் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக முதல்வா் பழனிசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்டைகின்றது.

இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுகின்றது. விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு பாதிப்படைகின்றன.

எனவே தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி வருகிற 2019 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகின்றது.

பொதுமக்கள் பாரம்பரிய முறையான வாழையிலை, பாக்கு மட்டைகளினாலான தட்டு, தாழம்பூ இலை, துணிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags: Plastic consumption Tamil Nadu

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*சூடுதண்ணீர் ஊற்றி பணிப்பெண்ணை கொலை செய்த கொடூர சம்பவம்!

*சேலம்- சென்னை பசுமை சாலை திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

*கணவனும் பிள்ளைகளும் கண்முன்னே இறந்ததை பார்த்த கர்ப்பிணிக்கு நேர்ந்த கண்ணீர் சம்பவம்!

*இந்தியாவில் 4.5 மணி நேரத்துக்குள் கட்டப்பட்ட சுரங்கப்பாதை!

*விஜய் மல்லையாவின் லண்டன் சொத்துக்கள் முடக்கம் : லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

You Might also Like