Type to search

​தனி கழிவறை வசதி இல்லாததால் பள்ளியை விட்டு விலகிய மாற்றுத்திறனாளி மாணவி!

Tamil nadu

​தனி கழிவறை வசதி இல்லாததால் பள்ளியை விட்டு விலகிய மாற்றுத்திறனாளி மாணவி!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

{ Displaced student left school }

ஈரோடு அடுத்துள்ள கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, இவர் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி மலர்கொடி வீட்டுவேலை செய்து வருகின்றார்.

இவரது மகள் தரணி. மாற்றுத்திறனாளியான இவர், நடக்க முடியாத நிலையிலும், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், டூட்டோரியல் எனப்படும் தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் 8-ஆம் வகுப்பு வரை படித்தார்.

இதன் பின்னர், வறுமை காரணமாக, ரயில்வே காலனி அரசு மேல்நிலை பள்ளியில் அவரை 9ஆம் வகுப்பு சேர்த்தனர், அங்கு தனியாக கழிப்பறை இல்லாததால் பள்ளியில் இருந்து விலகி, செங்கோடம்பள்ளம் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் தாரணி சேர்ந்துள்ளார்.

இதனிடையே, தாரணி மாற்றுச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், நீண்ட நாட்களாக சான்றிதழை வழங்காமல், ரயில்வே மேல்நிலை பள்ளி நிர்வாகம் இழுத்தடித்தாக புகார் எழுந்தது.

கடும் போராட்டத்திற்கு பின்னரே, அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாரணியின் பெற்றோர் கூறுகையில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் சிரமமின்றி படிக்கும் வகையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தனி கழிப்பறை கட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி விளக்கம் அளித்துள்ளார்.

Tags: Displaced student left school

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: