Type to search

சந்தேகத்தால் மூதாட்டியை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்!

Tamil nadu

சந்தேகத்தால் மூதாட்டியை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

எடப்பாடி அருகே குழந்தைகளை கடத்த வந்ததாகக் கூறி, பெண் ஒருவரை பொதுமக்கள் கட்டிப் போட்டு அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.civilians tied knot suspicion

சேலம் மாவட்டம் எடப்பாடி ஏரி சாலை அருகே முகவரி கேட்ட பெண்ணை, குழந்தைகளைக் கடத்த வந்தவர் எனக் கருதியுள்ளனர். அந்த பெண்ணின் கையை கட்டிப்போட்டு, கடுமையாகத் தாக்கிய பொதுமக்கள், பின்னர் எடப்பாடி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த குருவாயி என்பதும், கண்ணிற்கு பயன்படுத்தும் மருந்து வைத்திருந்ததும், மது போதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

குழந்தை கடத்தும் நோக்கத்துடன் அவர் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட போலீசார், அந்த பெண்ணை சொந்த ஊரான சங்ககிரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: