Type to search

தள்ளுபடியாகும் கர்நாடக விவசாயிகளின் ரூ.34 ஆயிரம் கோடி! – குமாரசாமி அறிவிப்பு!

INDIA India Top Story

தள்ளுபடியாகும் கர்நாடக விவசாயிகளின் ரூ.34 ஆயிரம் கோடி! – குமாரசாமி அறிவிப்பு!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

(Rs 34,000 crore farmers Karnataka)

கர்நாடக மாநில விவசாயிகளின் 34 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்வதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பின் காங்கிரஸ்- மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து முதல்வர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் கர்நாடக மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அதன்படி கர்நாடக முதல்வர் குமராசாமி இன்று கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது.

விவசாயிகளுக்கு கடன் ரூ.34 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம், விவசாயி ஒருவர் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் அவர்களின் கடன் தள்ளுபடியாகும்.

அதுமட்டுமல்லாமல் , பயிர்க் கடன் தள்ளுபடியால், அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை ஈடுகட்ட, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.1.14 காசுகளும், டீசலுக்கு ரூ.1.12 காசுகளும் காலால் வரி உயர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் , இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் மீதான கலால்வரி(Excise tax) 4 சதவீதம் உயர்த்தப்படும். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிவரை பெற்றுள்ள விவசாயிகளின் கடன் இந்த அறிவிப்பு மூலம் தள்ளுபடி செய்யப்படும்.

அதோடு , இந்த மாநில மக்கள் ஒரு கட்சிக்கு பெரும்பான்மை அளித்து ஆட்சியில் அமரவைக்காவிட்டாலும் கூட, கூட்டணி ஆட்சிக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கி இருக்கிறோம். எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் மூலம் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உரிய பணிகளைச் செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.

tags;-Rs 34,000 crore farmers Karnataka

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: