Type to search

வரதட்சனை கொடுமை! – எஸ்.பி முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்!

Tamil nadu

வரதட்சனை கொடுமை! – எஸ்.பி முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்!

Share

ஆந்திர மாநில குப்பம் பகுதியை சேர்ந்த பார்வதி என்பவர் கடந்த 2016ம் ஆண்டு கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை, திருமணம் செய்துள்ளார்.dowry dishonest – sp office young woman try fire

25 சவரன் நகையுடன் திருமணம் செய்து கொண்ட பார்வதியிடம், அவருடைய மாமியார், நாத்தனார் ஆகியோர் மேலும் 4 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டு துன்புறுத்தி, வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவர் ராஜாவிற்கு வேறு திருமணம் செய்து வைப்பதை அறிந்து, கடந்த 3 மாதத்திற்கு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இதனையடுத்து தன்னை கணவருடன் சேர்த்து வைக்க கோரி எஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: