Type to search

எல்லைத்தாண்டிய தமிழக மீனவர்கள் 12 பேர் கைது! – இலங்கை கடற்படை!

Tamil nadu

எல்லைத்தாண்டிய தமிழக மீனவர்கள் 12 பேர் கைது! – இலங்கை கடற்படை!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.12 tamilnadu fishermen arrested – sri lanka navy!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், ஆயிரத்து 500 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர்.

பின்னர் 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்த இலங்கைக் கடற்படையினர் 12 மீனவர்களை கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடித் தடைக்காலத்திற்கு பின்னர் முதன்முறையாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மற்ற மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: