Type to search

​வீட்டுப்பாடம் எழுதாத மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!

INDIA CRIME

​வீட்டுப்பாடம் எழுதாத மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!

Share

{ teacher punished student }

நாமக்கல்லில் வீட்டுப் பாடம் எழுதாத மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது.

நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் மகள் ஸ்ரீஜா நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.

இவர் ஆங்கில ஆசிரியை மனோன்மணி அளித்த வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவி ஸ்ரீஜாவை கன்னத்தில் அடித்ததோடு தலையை பிடித்து சுவற்றில் அடித்ததாகக் கூறப்படுகின்றது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவி ஸ்ரீஜா நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Tags: teacher punished student

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags:

You Might also Like