காவலரைத் தாக்கிய “ரவுடி ஆனந்தன்” என்கவுன்டரில் சுட்டுக் கொலை!
Share

சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் நேற்று முன்தினம் ரவுடிகள் தகராறு செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற முதல் நிலைக் காவலர் ராஜவேலு கடுமையாக தாக்கப்பட்டார். சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் தலை உள்பட 16 இடங்களில் காயமடைந்த ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.rowdy anandan shot dead encounter
அவரை தாக்கியதாக நேற்று அரவிந்த், அஜித்குமார் ஆகியோர் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு மத்திய கைலாஷ் பகுதியில் ஆனந்தன் உள்ளிட்டோர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை காவலர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது ஆனந்தனை கைது செய்த காவல்துறையினர், பதுக்கிவைத்திருந்த வாக்கி டாக்கியை எடுத்துத் தருமாறு கேட்டுள்ளனர்.
அப்போது கத்தி மூலம் உதவி ஆய்வாளர் இளையராஜாவை கையில் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது கத்தியை கீழே போடுமாறு எச்சரித்தபோதும் ஆனந்தன் மீண்டும் தாக்க முற்பட்டதால் உதவி ஆணையர் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆனந்தனின் உடல் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் மீது வழிப்பறி, கொலை உள்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்கவுன்டர் தொடர்பாக நீதிபதி உரிய விசாரணை நடத்துவார் என காவல்துறை இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- இயக்குநர் திவ்ய பாரதியை கைது செய்ய முயற்சி! – த.மு.எ.ச கடும் கண்டனம்!
- காஞ்சிபுரம் பெருமாள் கோவிலுக்குள் அடித்துக் கொள்ளும் ஐயர்கள்! (காணொளி)
- கமல்ஹாசன் யோசனையை பின்பற்றினால் சாதியை ஒழிக்க முடியுமா?
- எஜமானரை காப்பாற்ற மின்வயரை கடித்து இறந்துபோன நாய்!
- நெஞ்சை நிமித்தி தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு!
- நடுரோட்டில் மனைவியை தாறுமாறாக வெட்டிய கணவன்! (காணொளி)
- சிறுவனை நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்த கொடூரன்!
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- அருந்ததிய சாதியினர் மாட்டுவண்டியில் சிக்கி வன்னியர் சாதி சிறுமி உயிரிழப்பு!
- ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்!
- கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!
- மகளை சுத்தியலால் மண்டையை உடைத்து கொலை செய்த தந்தை!