காவல்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவலர் ராஜவேலுவின் குடும்பத்தினர் கோரிக்கை!
Share

{ Police provide protection Rajesh family }
காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக காவலர் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையில் பி.எம்.தர்ஹா குடிசை மாற்றுப் பகுதியில், சிலர் மது அருந்தியபடி பெண்களிடம் தகராறு செய்வதாக, ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராயப்பேட்டை இ-2 காவல் நிலையத்தில் இருந்து முதல்நிலைக் காவலர் ராஜவேலு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். பி.எம்.தர்ஹா பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த அரவிந்தன், ஜிந்தா, வேல்முருகன், உள்ளிட்ட 10 பேரையும் கலைந்து போகும்படி எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், காவலர் ராஜவேலுவை துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த காவலர் ராஜவேலு அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவலரை நேரில் கண்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மேல் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதனைத் தொடர்ந்து, காவலரை தாக்கிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இரவு நேரத்தில் சமூக விரோதிகளால் காவலர் ராஜவேலு கொடூரமாக தாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
தனது கணவருக்கு நேர்ந்தது போன்று இனி வேறு எந்த காவலருக்கும் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரவு நேர காவலர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் காவலர் ராஜவேலுவின் மனைவி மகாலெட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 70 க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கப்பட்டுள்ளது காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையில் ஜெகதீசன் துரைராஜ் என்ற காவலரும், காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் மோகன்ராஜ் என்ற காவலரும் சமூக விரோத கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அபிராமபுரம் காவல் ஆய்வாளர் அஜூ, மயிலாப்பூர் காவல் உதவி ஆய்வாளர் என சென்னையில் மட்டும் 15 பேர் மர்மகும்பல்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
சட்ட ஒழுங்கை பராமரிக்கும் மிக முக்கியப்பணிகளில் ஒன்றான காவல் பணி மிகுந்த சவால் நிறைந்தது. மன உளைச்சலால் காவலர்கள் பலர் பாதிப்புக்குள்ளாகும் நிலையில், உடல் ரீதியாகவும் இதுபோன்ற தாக்குதல்களை காவலர்கள் எதிர்கொள்கின்றனர்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட காவலர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பதே காவலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags: Police provide protection Rajesh family
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- 51 இந்து கோயிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்!
- காவலரைத் தாக்கிய “ரவுடி ஆனந்தன்” என்கவுன்டரில் சுட்டுக் கொலை!
- இயக்குநர் திவ்ய பாரதியை கைது செய்ய முயற்சி! – த.மு.எ.ச கடும் கண்டனம்!
- காஞ்சிபுரம் பெருமாள் கோவிலுக்குள் அடித்துக் கொள்ளும் ஐயர்கள்! (காணொளி)
- கமல்ஹாசன் யோசனையை பின்பற்றினால் சாதியை ஒழிக்க முடியுமா?
- எஜமானரை காப்பாற்ற மின்வயரை கடித்து இறந்துபோன நாய்!
- நெஞ்சை நிமித்தி தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு!
- நடுரோட்டில் மனைவியை தாறுமாறாக வெட்டிய கணவன்! (காணொளி)
- சிறுவனை நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்த கொடூரன்!
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- அருந்ததிய சாதியினர் மாட்டுவண்டியில் சிக்கி வன்னியர் சாதி சிறுமி உயிரிழப்பு!
- ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்!
- கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!
- மகளை சுத்தியலால் மண்டையை உடைத்து கொலை செய்த தந்தை!