Categories: INDIAIndia Top Story

51 இந்து கோயிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்!

{ Muslims donate money 51 temple }

உத்தரபிரதேசம், பிஹாரில் 51 கோயில்கள் கட்டுவதற்கு நிலம், தொகையை நன்கொடையாக ஒரு முஸ்லிம் தொழிலதிபர் அளித்து மதநல்லிணக்கத்துக்கு முன் உதாரணமாக விளங்கி வருகின்றார்.

உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்தவர் ராஷீத் நசீம். ஷைன் குரூப் எனும் பெருநிறுவனத்தின் தலைவரான இவர், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தமது நிறுவனம் சார்பில் உபி,பிஹாரில் மொத்தம் 51 கோயில்கள் கட்டுவதற்கு நிலம், ரொக்கத் தொகையை நன்கொடையாக அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஷீத் நசீம் கூறும்போது, “இந்த வருடம் 21 கோயில்களும், அடுத்த வருடம் 30 கோயில்களும் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம். ஒரு முஸ்லிமாக நான் மற்ற மதங்களின் நலனுக்காக பணியாற்ற எந்த தடையும் இல்லை. மதநல்லிணக்கத்தை வளர்க்கும் இந்த முயற்சி நம் சமூகத்தில் சகோதரத்துவத்தையும், அமைதியையும் வளர்க்கும் என நம்புகின்றேன்” என்றார்.

ராஷீத் கட்டும் முதல் கோயில் அலகாபாத்-வாரணாசி நெடுஞ்சாலையில் ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது. அலகாபாத்தில் 2013 ஆம் ஆண்டில் நிலத்தரகராக தமது தொழிலை துவக்கிய ராஷீத் தற்போது சுற்றுலா மற்றும் குடிநீர் சுத்திகரிப்புத்துறையில் வளர்ந்து உபி, பிஹார் மாநிலங்களில் புகழ் பெற்ற தொழிலதிபராக வளர்ந்துள்ளார்.

இவர் பிரதமர் நரேந்திர மோடியை தனது முன்மாதிரியாகக் கொண்டு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்துள்ளார்.

சிந்துசமவெளி நாகரிகம் என்பது போல், அவத் பிரதேசம் என்று அழைக்கப்படும் உ.பி.க்கும் ஒரு நாகரிகம் உண்டு. இது, கங்கை, யமுனை நதிகளை போல் இந்து மற்றும் முஸ்லிம்கள் இணைந்து சமூகத்தில் மதநல்லிணக்கமாக செயல்படும் ‘கங்கா யமுனா நாகரிகம்’ என அழைக்கப்படுகின்றது.

இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதாலும், சில வரலாற்று காரணங்களாலும் அடிக்கடி மதக்கலவரம் நிகழ்வது உண்டு. இதைத் தடுக்கும் வகையில் அவத் பகுதிவாசிகள் இடையே கங்கா யமுனா நாகரிகம் என்பதும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது. இதற்கு முக்கிய உதாரணமாக ராஷீத் விளங்கி வருகின்றார்.

Tags: Muslims donate money 51 temple

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Kowshalya V

Recent Posts

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

16 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

17 hours ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

19 hours ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

19 hours ago

விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl…

20 hours ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

21 hours ago