Categories: India Top StoryTamil nadu

இயக்குநர் திவ்ய பாரதியை கைது செய்ய முயற்சி! – த.மு.எ.ச கடும் கண்டனம்!

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதியை கைது செய்ய முயற்சி செய்து வருவதுடன், இன்று அவரது வீட்டை அதிகாலையில் சுற்றி வளைத்து போலீஸ் சோதனை செய்திருப்பதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.director divya bharathi trying arrest – DMK condemned!

இதுகுறித்து தமுஎகச மாநிலத்தலைவர் சு.வேங்கடேசன். பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : மதுரை மாவட்ட தமுஎகசவில் மாவட்டக்குழு உறுப்பினராக இருப்பவர் திவ்யபாரதி. ஏற்கனவே “கக்கூஸ்” என்கிற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார், வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் தற்போது ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்து “ஒருத்தரும் வரலே” என்கிற ஆவணப்படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் அதன் முன்னோட்டக்காட்சி (டீஸர்) வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (02.07.18) சேலம் க்யூ பிராஞ்ச் போலிசார் என்று சொல்லிக்கொண்ட சிலர் திவ்யபாரதியின் தந்தையிடம் சென்று இந்தப் படம் பற்றிய தகவல்களை கேட்டு மிரட்டியுள்ளனர். தனக்கு தெரியாது என அவர் தெரிவித்துவிட்ட நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதலே பெண் காவலர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட போலீசார் திவ்யபாரதியின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

அவரது “ஒருத்தரும் வரலே” படத்தின் வீடியோ எங்கிருக்கிறது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டில் இருந்த அவரது கணவர் கோபாலை திவ்யா எங்கே எனக் கேட்டு மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்தும் திவ்யபாரதியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த போலிசார், இன்று பிற்பகல் அவர் நீதிமன்றம் சென்றிருந்தபோது அங்கும் வந்து திவ்யபாரதியின் வண்டிச்சாவியை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு எங்களுடன் வா விசாரிக்கணும் என மிரட்டியுள்ளனர். அவருக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்களுடனும் போலீசார் வாக்குவாதம் செய்துள்ளனர்.

காவல்துறையினரின் இத்தகைய போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம். அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் படியாக இயங்கும் ஒருவரது கலைச் செயல்பாட்டு உரிமையில் இதுபோல அராஜகமான முறையில் போலீசார் தலையிடுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது.

உரிய காரணங்கள் சொல்லாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் வீட்டை சோதனையிடுவதும் விசாரணைக்கு ஒருவரை அழைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமல் விசாரணைக்கு அழைப்பதும், நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி நடப்பதும் சட்டமீறலாகும்.

கருத்துச்சுதந்திரத்தை கைக்கொள்ள விடாமல், அச்சுறுத்தி முடக்கும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கருத்துரிமை மீதும் கலைச்செயல்பாட்டின்மீதும் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் காவல்துறையின் இந்த அராஜகச்செயலை கண்டிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

39 mins ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

1 hour ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

2 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

3 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

3 hours ago

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

20 hours ago