6 வருடம் சேர்ந்து வாழ்ந்துவிட்டு “பாலியல் பலாத்கார வழக்கு” போட்ட பெண்!
Share

டெல்லியை சேர்ந்த ஆண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் பதிவு செய்திருந்த நிலையில், தன் மீதான அந்த கிரிமினல் வழக்கை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்ட ஆண் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.woman lived 6 years complaint sexually harassed
இதுதொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பெண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தன்னுடன் சேர்ந்த வாழ்ந்த அந்த குறிப்பிட்ட நபர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் சேர்ந்த ஆறு வருடம் வாழ்ந்ததாகவும், ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அதனால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் ஆண் தரப்பாக ஆஜரான வழக்கறிஞர், மனம் ஒத்து சேர்ந்து வாழ்ந்து விட்டு, பின்னர் பாலியல் பலாத்கார வழக்கு தொடர முடியாது என்றும், இது கிரிமினல் சட்டத்தின் கீழ் வராது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு நியாயத்தையும் கேட்ட நீதிபதிகள், ஆண் மீதான கிரிமினல் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
மேலும், திருமணம் செய்வேன் என கூறி சேர்ந்து வாழ்ந்துவிட்டு மணம் செய்ய மறுப்பவரிடம், பாதிக்கப்பட்ட பெண் இழப்பீடு கோர முடியுமா என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் உதவுமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது! – உச்ச நீதிமன்றம்!
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- அருந்ததிய சாதியினர் மாட்டுவண்டியில் சிக்கி வன்னியர் சாதி சிறுமி உயிரிழப்பு!
- ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்!
- கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!
- மகளை சுத்தியலால் மண்டையை உடைத்து கொலை செய்த தந்தை!
- இந்தியாவில் முதல் திருநங்கை வழக்கறிஞர்! – சத்யா ஸ்ரீ சர்மிளா! (வீடியோ)
- “பயந்துவிடவில்லை” “பதுங்கியிருக்கிறோம்” – மிரட்டும் சீமான்!
- 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் பிளேடால் கழுத்தை அறுத்ததால் பதற்றம்!(காணொளி)