Type to search

புது மணப்பெண்ணுக்காக தற்கொலை செய்துகொண்ட புது மாப்பிள்ளை!

INDIA

புது மணப்பெண்ணுக்காக தற்கொலை செய்துகொண்ட புது மாப்பிள்ளை!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

(groom suicide new Brides)

மார்த்தாண்டம் அருகே, திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது காதல் மனைவியை,  திருமண வயது பூர்த்தியாகவில்லை எனக்கூறி அதிகாரிகள் அழைத்துச் சென்றதால் மனமுடைந்த புது மாப்பிள்ளை,  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாறவிளை பகுதியைச் சேர்ந்த வினு என்பவர்,  அபிஷா என்ற பெண்ணை காதலித்துள்ளார்.  இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களுக்கு, நேற்று  திருமணமும்,  அதைத்  தொடர்ந்து, வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது,  அங்கு  சென்ற  குழந்தைகள் நல பாதுகாப்பு  அதிகாரி குமுதா மற்றும் போலீசார்,  மணப்பெண்ணுக்கு, திருமண வயது எட்டவில்லை எனக்கூறி, வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

மேலும், மணமகளை, விசாரணைக்குப்பின் காப்பகத்திற்கும், மணமகனை வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மணமுடைந்த புது மாப்பிள்ளை வினு, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

tags;-groom suicide new Brides

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares