Type to search

“ஜன ஓளஷதி” மலிவு விலை மருந்தகம்! – மத்திய அரசு!

INDIA India Top Story

“ஜன ஓளஷதி” மலிவு விலை மருந்தகம்! – மத்திய அரசு!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் ஏழை எளிய மக்களுக்குக்கு குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும், ‘ஜன் அவுஷதி’எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்து வருகிறது.cheapest price pharmacy – central government

மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தற்போது நாடு முழுவதும் 3,679 மருந்தகங்கள் இயங்குகின்றன. தமிழகத்தில், 339 கடைகளும், கோவையில் 31 கடைகளும் செயல்படுகின்றன. இக்கடைகளில், ‘ஜெனரிக்’ மருந்துகள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

‘ஜெனரிக்’ மருந்து, பிற ‘பிராண்டட்’ மருந்துகளைப் போன்று தரமானதே; எனினும், விலை குறைவானது.இங்கு, 700 விதமான மருந்துகள் விற்கின்றனர். ‘பிராண்டட்’ மருந்துகளை விட, விலை குறைவாக இருப்பதால், மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

இந்த மருந்தகங்களில், ‘ஜெனரிக்’ பெயரில் மட்டுமே மருந்துகள் கிடைக்கும். உதாரணமாக, ‘குரோசின்’ என்ற, பிராண்டட் பெயரில் கிடைக்காது. ஆனால், அதன் மூலப்பொருளாக விளங்கும், ‘பாரசிட்டமால்’ என்ற பொதுவான ஜெனரிக் பெயரில் கிடைக்கும். நோய்களுக்கான மருந்துகளை டாக்டர்கள் பரிந்துரைக்கும்போது, மருந்துகளின் அடங்கியுள்ள மூலக்கூறுகளின் பெயரை மட்டும் எழுத வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், அதனை கடைபிடிப்பதில்லை.

பெரும்பாலும், மருந்து நிறுவனங்களின் பிராண்ட்டை குறிப்பிட்டே மருந்துச்சீட்டில் எழுதுகின்றனர். இவ்வகை மருந்துகளின் விலை அதிகம். அதுவே, ஜெனரிக் மருந்து என்றால் விலை மிகமிக குறைவாகவே இருக்கும்.

மத்திய அரசின் ‘ஜன் அவுஷதி’திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மருந்து வினியோகம் மற்றும் சில்லரை விற்பனை உரிமத்தை எடுத்திருப்பவர்களில் கோவையை சேர்ந்த சிரில் என்பவரும் ஒருவர். சிரில் கூறியதாவது: ‘ஜன் அவுஷதி’மருந்தகம் ஆரம்பிக்க தனி நபர், நிறுவனம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும், ‘ஜன் அவுஷதி’மருந்தகங்கள் ஆரம்பிக்கலாம்.

அதற்கான வழிமுறைகள் http://janaushadhi.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சொந்தக்கடை அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்ட கடை இருக்க வேண்டும். கடையின் அளவு குறைந்த பட்சம், 120 சதுர அடி இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவுடன் கூடிய மருந்தாளுனர் (பி.பார்ம் அல்லது டி.பார்ம்) பணியில் சேர்த்ததற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மருந்து கடை ஆரம்பிப்பதற்கான லைசென்ஸ் பெற வேண்டும்.

மருந்து கடை ஆரம்பிக்க, 2.5 லட்ச ரூபாய் வரையில் மத்திய அரசு மானியம் தருகிறது. வரிகள் தவிர்த்து, எம்.ஆர்.பி.,யில், 20 சதவீத கமிஷன் வழங்கப்படும். கடைகள் ஆரம்பிக்க லைசென்ஸ் பெற்றவர்கள், எங்களைப் போன்ற வினியோகிஸ்தர்களிடம் மருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களும், விண்ணப்ப படிவமும் ஆன்லைனிலேயே கிடைக்கிறது.இவ்வாறு, சிரில் கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: