Categories: Tamil nadu

எஜமானரை காப்பாற்ற மின்வயரை கடித்து இறந்துபோன நாய்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கல்கொண்டான்பட்டியில் நேற்று மாலை பெய்த மழையின் காரணமாக அறுந்து கிடந்த மின்வயரை பார்க்காமல் இன்று காலை கல்கொண்டான்பட்டியைச் சேர்ந்த மொக்குசு என்ற முதியவர் தனது தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றதாக கூறப்படுகிறது.Bite electric bite save master

இந்நிலையில் அறுந்து கிடந்த மின்வயரை மாடு மிதித்ததாக் மின்சாரம் பாய்ந்து, துடித்த நிலையில் மாட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதனையறிந்த முதியவரின் வளர்ப்பு நாய் அவர்களை காப்பாற்ற முயல்வதாக மின்வயரை கடித்து இழுத்த நிலையில் நாயின் மீதும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மூவரும் உயிரிழந்தனர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த உறவினர்கள் போலிசாருக்கு தகவல் அளித்த நிலையில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடந்த இடத்தை உசிலம்பட்டி கோட்டாச்சியர் முருகேசன், உசிலம்பட்டி காவல்துணைக் கண்காணிப்பாளர் கல்யாணக்குமார் நேரில் விசாரனை நடத்தி இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணமாக 1 லட்சம் நிதி வழங்கப்படும் என உசிலம்பட்டி கோட்டாச்சியர் உறுதியளித்தார்.

மேலும் தன்னை வளர்த்த முதியவர் மற்றும் தன்னுடன் இருந்த மாடு உயிருக்கு போராடிய நிலையில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் வயரை கடித்து இழுத்து நாயும் உயிரிழந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் கிராம மக்களிடையே பொரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

source : News7 Tamil

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

4 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

5 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

6 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

7 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

8 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

9 hours ago