Categories: INDIAIndia Top Story

​ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்!

அலகாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தங்கள் அமைப்புக்காக வேலை செய்யுமாறும், அதற்காக மாதம் 3.5 லட்ச ரூபாய் சம்பளம் தருவதாகவும், வாட்ஸ் அப் மூலம் ஐஎஸ் இயக்கத்தினர் வலைவீசி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.youths intimidate join ISS group whatsapp movement!

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பையில் படித்துவிட்டு அங்கேயே பணியாற்றிவருகிறார்.

கடந்த வெள்ளிகிழமையன்று மதியவேளையில் அந்த இளைஞர், தனது மொபைல் போனில் ஆன்லைனில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் வாட்ஸ் அப் குழு ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாட்ஸ் அப் குழுவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முகப்பு படம் (Display Picture) இருந்துள்ளதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அந்த குழுவில் இருந்து அவர் தானாகவே நீங்கியுள்ளார்.

இருப்பினும் கனடாவைச் சேர்ந்த அந்தக் குழுவின் அட்மின் அந்த இளைஞரை மீண்டும் அந்த வாட்ஸ் அப் குழுவில் இணைத்ததோடு, ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுமாறும், இந்திய உளவுத்துறை அமைப்புக்கள் பற்றி தகவல்கள் பறிமாற வேண்டும், எனவும் அதற்கு மாதம் 5,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3.5 லட்ச ரூபாய்) சம்பளமாக தரப்படும் எனவும் ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அந்த குழுவில் இருந்து அந்த இளைஞர் தானாகவே விலகினாலும் அவரை மீண்டும் மீண்டும் இணைத்து இது போன்று மிரட்டல் விடுக்கப்பட்டதால் தனது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்ததோடு இது குறித்து தனது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் இது குறித்து நகர காவல் கண்காணிப்பாளரிடம் அந்த இளைஞர் குடும்பத்துடன் வந்து புகார் அளித்துள்ளார். தற்போது இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரனையை தொடங்கியுள்ளனர். இது போன்று பிற இளைஞர்கள் யாருக்கேனும் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரை இதே போன்று ஐ.எஸ் இயக்கத்தினர் தங்கள் அமைப்பில் இணைத்துள்ளதாக தகவல் வெளியானது. கடந்த செப்டம்பர் 2015ல் ஐ.எஸ் அமைப்பில் இணைவதற்காக இந்தியாவில் இருந்து புறப்பட முயன்ற கேரள இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india -…

38 mins ago

கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் – அன்புமணி கோரிக்கை

உழவர்கள் கடன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் கூட்டுறவு வங்கிக் கடனுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித்…

1 hour ago

ஆட்சியில் சர்வாதிகாரம் செய்கிறார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் ஒரு தொழிலாக மாறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.prime minister modi charge of dictatorship - rahul gandhi's சத்தீஸ்கர்…

2 hours ago

கேள்வி கேட்பவர்களை தாக்குவதுதான் பாஜகவின் கலாச்சாரமா? – டி.டி.வி. தினகரன்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார் அத்தொகுதியின் எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன்.bjp's culture attack questioners? - ttv dinakaran அப்போது அவர், பொதுவாழ்க்கைக்கு வந்த…

3 hours ago

ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase…

3 hours ago

ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

செப். 21, சீமான் தலைமையில் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.seeman's…

4 hours ago