Type to search

கிண்டல் அடித்ததால் 3 பேரை கொலை செய்த இளைஞர்..!

INDIA

கிண்டல் அடித்ததால் 3 பேரை கொலை செய்த இளைஞர்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(teasing young man killed 3 people)

வேலையில்லாமல் சுற்றி திரிகிறாயே என கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், உறவினர்கள் மூன்று பேரை குத்தி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே இளம் ஆண்களின் முதல் கவலை வேலை கிடைப்பதுதான். படித்த படிப்புக்கு வேலை இல்லையே.. மாத செலவுக்கு பணம் இல்லையே,  சீக்கிரம் வேலைக்கு போ என குடும்பத்தினரும் கண்டிப்பது உண்டு.  இந்நிலையில்  வேலையில்லாமல்  வெட்டியாகவே சுற்றித் திரிகிறியே என கிண்டல் செய்தவர்களை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் ,  மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த இளைஞர் சச்சின். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது.

இதனால்,  வேலையில்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.  சச்சின்  இப்படி வேலையில்லாமல் சுற்றித் திரிவதை அவரின் உறவினர் ஒருவர் கடுமையாக நக்கலடித்து பேசியதாக தெரிகிறது.

இதுமட்டுமில்லாமல் 6 வயது சிறுவன் ஒருவரையும் சச்சின் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.  ஆனால் அந்த சிறுவன் சச்சின் இடமிருந்து தப்பிவிட்டார்.  இதனிடையே சச்சின் குடும்பத்திற்கும்,  அவர் கொலை செய்த உறவினர்கள் குடும்பத்திற்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடைய சச்சினை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த சச்சின் மீது ஐபிசி 302, 307, 326 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags;-teasing young man killed 3 people

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •