Type to search

சேலத்தில் பேய் மழை: 13 வயது மாணவர் வெள்ளத்தில் மாயம்!

Tamil nadu

சேலத்தில் பேய் மழை: 13 வயது மாணவர் வெள்ளத்தில் மாயம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ student flooded Salem }

சேலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட வந்த ஆட்சியரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால், பச்சப்பட்டி, ஆனைநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் நுழைந்தது. ஏரி, குளங்கள் ஆகியவையும் நிரம்பியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திடீர் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்த நிலையில், 13 வயது மாணவர் அப்துல் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டார். மாணவரை தேடும்பணி முடக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்குட்டை ஓடை பகுதியில் தூர்வாராததால் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் தொழிற்சாலை கழிவுகளை அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். அப்போது ஆட்சியரை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags: student flooded Salem

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*கேரள மாநிலக் கல்லூரியில் மாணவரொருவர் அடித்து கொலை!

*“இப்படி செய்தால் சொர்கத்திற்கு போகலாம்” 11 பேரின் மர்ம மரணம்!

*மிஸ் இந்தியா’ பட்டம் என்னை தேடி வந்தது எப்படி தெரியுமா? அனுகீர்த்தி

*2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழுத விவசாயி!

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

*“பயந்துவிடவில்லை” “பதுங்கியிருக்கிறோம்” – மிரட்டும் சீமான்!

*எம்.பி நிதியில் இருந்து சாலைக்கு நிதி ஒதுக்கிய சச்சின்!

*ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க சிறு குச்சி போதும்! – கொள்ளையர்கள்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: