Type to search

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் பிளேடால் கழுத்தை அறுத்ததால் பதற்றம்!(காணொளி)

India Head Line Tamil nadu

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் பிளேடால் கழுத்தை அறுத்ததால் பதற்றம்!(காணொளி)

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சேலம் சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளேடால் பெண் ஒருவர் கழுதை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.selam highway stop otherwise cut neck video

சேலம் சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி காவல் துறையினருடன் சென்று நிலத்தை அளவிட்டு முட்டுக்கல் ஊற்றி வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மற்றும் 8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்து மறைமுகமாக மிரட்டும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்யாறில் உள்ள எருமைவெட்டி கிராமத்தில் நிலம் அளவீடு செய்து கற்கள் நடும் பணிகள் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு விவசாயிகள் ஒன்று கூடினர். அப்போது அந்த நில உரிமையாளரின் மகள் கழுத்தில் பிளேடை வைத்துக் கொண்டு கற்களை அகற்றிவிட்டு அதிகாரிகளை செல்லுமாறு கூறினார்.

ஆனால் அவர்கள் கல்லை எடுக்க மறுத்துவிட்டனர். மேலும் அப்பெண்ணிடம் இருந்து பிளேடை பறிக்க காவல் துறையினர் முற்பட்டனர். அப்போது உயிர் மீது அக்கறை இல்லை என்றும் விவசாயமே முக்கியம் என்றும் கூறிய அந்த பெண் சற்றும் எதிர்பாராதவிதமாக கழுத்தை அறுத்துக் கொண்டார். இதையடுத்து ரத்தம் கொட்டியதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரும்பிச் சென்ற அதிகாரிகள் :

இதேபோல் செய்யாறு அருகே கீழ் கொளத்தூரில் நிலம் அளக்க வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் நிலம் அளவீடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.

source : Sun News

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like