Type to search

பழனி சிலை கடத்தல் விவகாரம்! – சிக்கும் சில கட்சியினர்!

Tamil nadu

பழனி சிலை கடத்தல் விவகாரம்! – சிக்கும் சில கட்சியினர்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சென்னை தமிழக சிலைத்தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி.,யாக இருந்த பொன்.மாணிக்கவேல், அங்கிருந்து ரயில்வே ஐ.ஜி,யாக மாற்றப்பட்டுவிட, கோர்ட் தலையிட்டு, மீண்டும் அவரை பழைய பதவியிலேயே நியமித்தது.palani idol abduction case – politics party

கோபம் அடைந்த போலீஸ் உயரதிகாரிகள், ஒத்துழைப்பு அளிக்காததால், பொன்.மாணிக்கவேலுவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

இதற்கிடையில், பழனி முருகன் கோவில் தங்க சிலை உள்ளிட்ட பல்வேறு சிலை தொடர்பான விவகாரங்களிலும், அரசுத் தரப்பில் பொன்.மாணிக்கவேலுவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தான், கோர்ட்டிற்கு வந்து தன்னுடைய குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் பொன்.மாணிக்கவேல்.

பழனி சிலை விவகாரத்தில், தி.மு.க, முக்கியஸ்தர்கள் சிலரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர, பொன்.மாணிக்கவேல் முயற்சித்திருக்கிறார். அரசுத் தரப்பில் அழுத்தம் கொடுத்து, அதைத் தடுத்து விட்டதாகவும் புகார் கிளம்பி இருக்கிறது.

பொன்.மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆசிர்வாதத்தோடு, மீண்டும் வேகமாக புறப்பட்டிருப்பதால், விசாரணை வளையத்துக்குள் தி.மு.க, முக்கியஸ்தர்கள் கொண்டு வரப்படுவர் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: