Type to search

“இப்படி செய்தால் சொர்கத்திற்கு போகலாம்” 11 பேரின் மர்ம மரணம்!

Uncategorized

“இப்படி செய்தால் சொர்கத்திற்கு போகலாம்” 11 பேரின் மர்ம மரணம்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

{ mystery 11 people death }

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான உயிரிழந்த சம்பவத்தில், அவர்கள் அனைவரும் விநோத வழிபாட்டு முறையின்படி கூட்டாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

டெல்லியின் புராரி என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 11 பேர், நேற்று வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், 75 வயது மூதாட்டி ஒருவர் தரையில் படுத்தநிலையிலும் சடலமாக மீட்கப்பட்டனர், இந்த மர்ம மரணம் குறித்து, விசாரணை நடத்திய போலீசார் அந்த வீட்டில் இருந்து டைரி ஒன்றை கண்டெடுத்தனர், இதில், வினோத வழிபாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி, தொடர்ந்து சில நாட்கள் ஆலமரத்தை சுற்றிவர வேண்டும் என்றும், வியாழன் அல்லது ஞாயிற்றுக்கிழமை கூட்டாக தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்கொலை செய்துகொள்ளும்போது, அனைவரும் தூக்கில் தொங்க வேண்டும் என்றும், வயதானவர்கள் மட்டும், தரையில் படுத்த நிலையில் உயிரிழக்கலாம் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும், தற்கொலை செய்துகொள்ளும்போது, குறிப்பிட்ட ஒருவிதமான ஆடையை அணிய வேண்டும் என்றும், கை, கண், வாய் போன்றவற்றை கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் டைரியில் கூறப்பட்டிருந்தது.

டைரியில் எழுதி வைக்கப்பட்டிருந்தபடியே, 11 பேரும் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், வினோத வழிபாட்டு முறையின்படி, சொர்க்கத்திற்கு செல்லலாம் என்ற மூட நம்பிக்கையில், அனைவரும் கூட்டாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே, இந்த மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: mystery 11 people death

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags:

You Might also Like