Categories: Tamil nadu

அரசு பள்ளியில் சேர்ந்தால் மாணவர்களுக்கு 1 கிராம் தங்கம், ரூ.1,000 பரிசு!

தஞ்சாவூர் : அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயம், 1,000 ரூபாய் பரிசாக தரப்படும் என அறிவித்து இருந்த கிராமத்தினர், பெரிய விழா நடத்தி, 28 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.joined goverment school 1gm gold & rs.1000

தஞ்சாவூர், பேராவூரணி அருகே உள்ளது, துலுக்க விடுதி கிராமம். இங்கு, 1998 முதல், துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும், கிராம மக்களே செய்து வந்தனர். 2003ல், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, கல்வித் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். 83 மாணவர்கள் மட்டுமே இருந்ததால்,120க்கு மேல் மாணவர்கள் இருந்தால் மட்டுமே, தரம் உயர்த்த முடியும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளியை தரம் உயர்த்த நினைத்த கிராம மக்கள், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டனர். இதன்படி, பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயமும், 1,000 ரூபாய் பரிசுமும் வழங்கப்படும், என, அறிவித்தனர். இதனால், நடப்பு கல்வியாண்டில், 28 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். அறிவித்தபடி, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா, நேற்று முன்தினம் பள்ளியில் நடந்தது.

பேராவூரணி, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கோவிந்தராசு, மணவர்களுக்கு, 1 கிராம் தங்க நாணயம் மற்றும், 1,000 ரூபாய் பரிசு வழங்கினார். தற்போது, 96 மாணவர்கள் உள்ளனர். எனவே, பள்ளியை தரம் உயர்த்தும் கோரிக்கையை, மீண்டும் எழுப்ப, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’

தமிழகத்தை தொடர்ந்து கடல் தாண்டி அயல் நாடுகளிலும் தற்போது ரஜினி மக்கள் மன்றம் வலுப்பெற்று வருகிறது.rajini people's forum takes place huge way beyond sea…

15 hours ago

பெண் குழந்தை என கருதி 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.pregnant girl death…

15 hours ago

இருளில் மூழ்கும் சென்னை – ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு

இந்த அறிவிப்பின்படி செப்டம்பர் 19-ஆம் நாளான நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்வெட்டு ஏற்படும் எனவும்,…

15 hours ago

தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு தமிழிசை நேரில் சென்று இனிப்பு வழங்கி சமாதானம் (காணொளி)

காணொளி : taking thamilisai auto-driving home offering sweet smile video இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை : விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்…

16 hours ago

விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் – கனிமொழி பங்கேற்பு

ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலகக் கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று (18-ந் தேதி) காலை 10 மணிக்கு தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

16 hours ago

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு நீதிமன்றம் சம்மன்

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 13 பேருக்கு பட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.arvind kejriwal court summoned chief…

17 hours ago