Type to search

பள்ளிப்பேருந்து ​ஆட்டோ மீது மோதியதில் ஒருவர் பலி!

Tamil nadu

பள்ளிப்பேருந்து ​ஆட்டோ மீது மோதியதில் ஒருவர் பலி!

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

{ accident man dead place }

கோவில்பட்டி கடலைக்கார தெருவில் இயங்கி வரும் தனியார் நடுநிலைப்பள்ளியின் பேருந்து ஒன்று, தோணுகாலில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு, பள்ளிக்கு சென்றது.

பங்களாதெருவைச் சேர்ந்த மரியதாஸ் என்பவர் பேருந்தை ஓட்டினார். எட்டயபுரம் சாலையில் தலைமை தபால் நிலையம் முன்பு வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தறிகெட்டு ஓடியது.

இதில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது அடுத்தடுத்து மோதி, அவற்றை இழுத்து சென்றதோடு, அங்கு நின்று இருந்தவர்கள் மீதும் பேருந்து மோதியது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார், தங்கராஜின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், காயமடைந்தவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மரியதாசை கைது செய்தனர். இந்த விபத்தில், எந்தவித காயமுமின்றி பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மின்னல் வேகத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்து, கோவில்பட்டி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: accident man dead place

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*சேலத்தில் பேய் மழை: 13 வயது மாணவர் வெள்ளத்தில் மாயம்!

*கேரள மாநிலக் கல்லூரியில் மாணவரொருவர் அடித்து கொலை!

*“இப்படி செய்தால் சொர்கத்திற்கு போகலாம்” 11 பேரின் மர்ம மரணம்!

*மிஸ் இந்தியா’ பட்டம் என்னை தேடி வந்தது எப்படி தெரியுமா? அனுகீர்த்தி

*2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழுத விவசாயி!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags:

You Might also Like