Type to search

இன்றைய தினம் ஜி.எஸ்.டி தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்றது!

INDIA India Head Line

இன்றைய தினம் ஜி.எஸ்.டி தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்றது!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ Today celebrated India GST Day }

ஜிஎஸ்டி வரி இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரியில் குறிப்பிட்ட மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 1ம் திகதி ஜி.எஸ்.டி வரி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி மூலம் போதிய வருவாய் கிடைத்துள்ளதால் வரி விகிதங்களை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவாகின்றது. தற்போதைய நிதியாண்டில் ஜிஎஸ்டி மூலம் 12 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருவாய் 13 லட்சம் கோடியை எட்டும் நிலையில் உள்ளது என மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அரசுக்கு தொடர்ந்து வரி வருவாய் அதிகரிக்கும் நிலையில், அதன் பயனை நுகர்வோருக்கு அளிக்கும் வகையில், வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட ஜூலை ஒன்றாம் திகதி ஜி.எஸ்.டி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர் பியூஷ் கோயல், நிதி துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Tags: Today celebrated India GST Day

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

*பத்து ஆண்டுகளுக்குப்பின் வீட்டுக்கு வந்த மீனாட்சி!

*மணமகன் வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

*மகளை கர்ப்பமாக்கியத் தந்தை!

*​கமல்ஹாசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது!

*பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

*13 முறை பாலியல் பலாத்காரம் செய்த பிஷப் மீது நடவடிக்கை கோரும் கேரள கன்னியாஸ்திரி

*மருத்துவமனையில் ​நோயாளியை பெட்ஷீட்டில் அமர்த்தி இழுத்துச்சென்ற உறவினர்கள்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: