Type to search

கிராமத்தில் மாடுகளை கொன்ற புலி! – பொதுமக்கள் அச்சம்!

Tamil nadu

கிராமத்தில் மாடுகளை கொன்ற புலி! – பொதுமக்கள் அச்சம்!

Share
  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    27
    Shares

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தினுள் அமைந்துள்ள நம்பியார் குன்னு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.tiger killing cows village – public fears!

இரு தினங்களுக்கு முன்பு இரண்டு மாடுகளை ஒரே நாளில் புலி ஒன்று அடித்துக் கொன்றது. எனினும், மாடுகளைக் கொன்றது வால்பாறையிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விடப்பட்ட ஆட்கொல்லி சிறுத்தைதான் என நினைத்து கிராம மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.

இதனையடுத்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் இறந்த மாடுகளின் அருகில் ரகசிய கண்காணிப்புக் கேமராக்களை வைத்து கண்காணித்தனர். இதில் மாடுகளை கொன்ற அந்த புலி, மாடுகளை சாப்பிடும் வீடியோ பதிவானது.

tiger killing cows village - public fears!

இதனையடுத்து மாடுகளை கொன்றது புலிகள் காப்பகத்தில் உள்ள 11 வயது மதிக்கதக்க ஆண் புலி என்பதை உறுதி செய்த வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த புலியை கண்காணிக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகள் மீது அச்சம் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 27
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    27
    Shares
Tags: