Type to search

​தமிழர்கள் பிடிக்கும் மீன்களை கேரளாவில் விற்க திடீர் தடை!

Tamil nadu

​தமிழர்கள் பிடிக்கும் மீன்களை கேரளாவில் விற்க திடீர் தடை!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை கேரளாவில் விற்க அம்மாநில வியாபாரிகள் திடீர் தடை விதித்ததால், பாம்பனில் 50 டன் மீன்கள் தேங்கிருக்கின்றது. எனவே தமிழக அரசு கேரள அரசுடன் பேசி தீர்வு காணவேணும் என பாம்பன் மீனவர்கள் கோரிக்கை.tamilnadu fishermens fish not selling kerala

தமிழகத்தில் இருந்து பெறும்பாலான மீனவர்கள் கேரளாவிற்கு தினமும் லாரி மூலம் மீன்கள் அனுப்பி அங்குள்ள மார்க்கெட் மற்றும் அங்குள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாம்பனில் இருந்து செல்லும் மீன்களை அனுமதிக்காமல் கேரள எல்லைபகுதியில் வாகனங்களை தமிழகத்திற்கு திரும்ப அனுப்பட்டு வருகின்றனர். இதனால் பாம்பனில் இருந்து கேரளாவிற்கு அனுப்ப முடியாமல் சுமார் 50டன் மீன்கள் தேக்கமடைந்துள்ளனர். மேலும் மீன் விலை வீழ்ச்சியடைந்து மீன்கள் கிலோவிற்கு 50 முதல் 100 ரூபாய் வரை குறைவாக விற்பனையாகி வருகின்றது.

இந்நிலையில், மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக, ரசாயனம் பயன்படுத்துவதாக கூறி, கடந்த இரண்டு நாட்களாக பாம்பனில் இருந்து செல்லும் மீன்களை, கேரளத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு, கேரள அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் என பாம்பன் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: