Type to search

எம்.பி நிதியில் இருந்து சாலைக்கு நிதி ஒதுக்கிய சச்சின்!

India Top Story Tamil nadu

எம்.பி நிதியில் இருந்து சாலைக்கு நிதி ஒதுக்கிய சச்சின்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலையை அமைக்க, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கியுள்ளார்.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில், 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் சாந்தா, திட்ட இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோல்டன் சிட்டி என்னும் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த தார்ச் சாலை, அப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்ட ஆட்சியரும், பெரம்பலுாரை சேர்ந்தவருமான ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று நியமன எம்பி பதவி வகித்த சச்சின் டெண்டுல்கர், தமது பதவிக்காலம் முடியும் நேரத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். நியமன எம்பிக்கள் நாட்டின் எந்த பகுதியின் வளர்ச்சிக்கும் தங்களது தொகுதி நிதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கலாம் என்ற அடிப்படையில் சச்சின் இந்த நிதியை ஒதுக்கியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: