Type to search

ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க சிறு குச்சி போதும்! – கொள்ளையர்கள்!

Tamil nadu

ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க சிறு குச்சி போதும்! – கொள்ளையர்கள்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சென்னை எழிலகம் அருகே உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மற்றும் சிந்தாதிரிபேட்டை பஞ்சாப் வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் குறிப்பிட்ட ஒரு வாடிக்கையாளர்களின் பணம் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.little stick take money ATM! – robbers!

இது குறித்து அண்ணாசதுக்கம், சிந்தாதிரிபேட்டை காவல்நிலைய போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று எழிலகம் அருகே இருக்க கூடிய ஏ.டி.எம் மையத்தில் வெகுநேரமாக சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாகுமார், மனோகர் குமார் என்பது தெரியவந்தது.

சென்னையில் எழிலகம் அருகே இருக்க கூடிய பழைய ஏ.டி.எம் மையம் உள்ளிட்ட பல ஏ.டி.எம்.களில். பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களின் வெளியே வரும் பணத்தை தடுத்து பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஏ.டி.எம்-மில், பணம் வரும் இடத்தில் சிறு குச்சியை வைத்து அடைத்து நூதன முறையில் பணம் எடுத்து தெரியவந்துள்ளது. ரயில் மூலம் சென்னைக்கு வந்து ஏ.டி.எம் களில் பல லட்சங்களை திருடிவிட்டு விமானம் மூலம் பீகாருக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளதையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: