Type to search

இதற்குமட்டும்தானா பெண்குழந்தைகள்! வேதனையில் மித்தாலி ராஜ்!

INDIA

இதற்குமட்டும்தானா பெண்குழந்தைகள்! வேதனையில் மித்தாலி ராஜ்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

(girls only sympathy thalami raj)

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதற்காகவா பெண் குழந்தைகள் பெற்றெடுக்கப்படுகிறார்கள் என்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் நாள்தோறும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை பார்க்கும் போது மனம் வலிப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காகத்தான் பெண்களாக நாங்கள் பிறந்தோமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்காகவா பெண் குழந்தைகள் பெற்றெடுக்கப்படுகிறார்களா என்றும் மித்தாலி ராஜ் வேதனை தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த ஆண் பெண் விகிதாச்சாரம் என்பது இதுதானா என்றும் மித்தாலி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

tags;-girls only sympathy thalami raj

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares