Categories: INDIA

கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!

மத்திய பிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். டெல்லியில், மருத்துவ மாணவி நிர்பயா வன்கொடுமை செய்யப்பட்டதை போன்று இந்த சிறுமியும் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.Father’s 8-year-old girl loses pregnancy

மத்தியப் பிரதேச மாநிலம், மான்டசூர் பகுதியில் கடந்த 26-ம் தேதியன்று, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிச் செல்வதற்காக, எட்டு வயது சிறுமி தனது தாத்தாவுக்காக காத்திருந்தார். அப்போது, அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பள்ளி முடிந்தும் வீடு திரும்பாத சிறுமியைத் தேடிய பெற்றோர், போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் தீவிர தேடுதலுக்குப் பிறகு, கழுத்தறுத்த நிலையில் பேருந்தில் இருந்து சிறுமியை மீட்டனர் போலீஸார். மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, இரண்டு அறுவைச் சிகிச்சை முடிந்துள்ள நிலையிலும், அபாய கட்டத்தில் இருந்து மீளவில்லை. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று மத்தியப் பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிர்பயாவை போன்று இந்த சிறுமியும் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். சிறுமியின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் இரண்டு பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ம.பி மாநில பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ், `பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் அவரின் தந்தையின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்’ எனக் கூறினார்.

இதற்கு, `அரசு சார்பில் வழங்கப்படும் எந்த இழப்பீடும் வேண்டாம். என் 8 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைத் தூக்கிலிட்டு தண்டிக்க வேண்டும்’ என சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Recent Posts

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

14 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

14 hours ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

17 hours ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

17 hours ago

விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl…

18 hours ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

19 hours ago