Type to search

மகனை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தந்தை!

INDIA CRIME

மகனை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தந்தை!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

{ cruel father killed three old son }

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே மனைவி மீதான கோபத்தில், குடிபோதையில் இருந்த தந்தை மூன்றரை வயது மகனை கிணற்றில் வீசி கொன்ற பயங்கரம் அரங்கேறியுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த கணபதிபுரம் குளக்கரையைச் சேர்ந்த முனியப்பன் – ராதா தம்பதி, கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.

இவர்களது மகன்கள் தீபக், ரூபன் ஆகியோர், தந்தையிடமும், தாயிடமும் மாறி மாறி இருந்துள்ளனர். குடிப்பழக்கம் உடைய முனியப்பன், காஞ்சிபுரத்தில் தாய்வீட்டில் இருக்கும் ராதாவிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாக இருந்துள்ளது.

அண்மையில் ராதாவுடன் தகராறில் ஈடுபட்ட முனியப்பன், 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு கணபதிபுரத்துக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், சனிக்கிழமையன்று வயல்வெளிக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்ற அவர், குடிபோதையில் 2 பிள்ளைகளையும் விவசாய கிணற்றில் தூக்கி வீசியுள்ளார்.

தண்ணீரில் விழுந்ததில் 7 வயது மகன் தீபக் நீந்தி படியில் ஏறி வெளியே வந்துள்ளான். ஆனால், மூன்றரை வயது மகன் ரூபன் கிணற்றில் தத்தளித்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.

இதனிடையே ஊருக்குள் வந்த தீபக், உறவினர்களிடம் நடந்ததைச் சொல்லி கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளான். ஆனால், அவர்களால் மூன்றரை வயது ரூபனின் உடலைத்தான் மீட்க முடிந்தது.

தகவலின்பேரில் வந்த தக்கோலம் போலீசார், ரூபனின் உடலை பிணக்கூறு ஆய்வுக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் தலைமறைவான குடிகார தந்தை முனியப்பனை தேடி வருகின்றனர்.

Tags: cruel father killed three old son

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like