Type to search

பச்சிளம் குழந்தையை கத்தியால் கீறிய கொடூரன்!

Tamil nadu

பச்சிளம் குழந்தையை கத்தியால் கீறிய கொடூரன்!

Share
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares

(5 month baby ear neck injurious)

திருவள்ளூர் அருகே வீடு புகுந்த மர்மநபர் ஐந்து மாத குழந்தையின் கழுத்து மற்றும் காதுகளை கீறி காயத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜன். அவரது மனைவி லிடியா மற்றும் ஐந்து மாத பச்சிளங்குழந்தையுடன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை வேளையில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர், குழந்தையின் காதுகள் மற்றும் கழுத்துப்பகுதிகளை கூர்மையான ஆயுதத்தால் கிழித்து, வீட்டின் முன்பு வீசிச்சென்றதாகக் கூறப்படுகிறது.

வலியால் குழந்தை அலறித் துடிக்க, அழுகுரல் கேட்டு அதிர்ச்சியில் ஓடிவந்த பெற்றோர் குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், முன்விரோதம் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

tags;-5 month baby ear neck injurious

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares