Type to search

பேருந்து கவிழ்ந்த விபத்தில் 35 பயணிகள் உடல் சிதறி உயிரிழப்பு!

INDIA

பேருந்து கவிழ்ந்த விபத்தில் 35 பயணிகள் உடல் சிதறி உயிரிழப்பு!

Share

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்டின் பவ்ரி கர்வால் மாவட்டத்தின் நானிதண்டா பகுதியில் பேருந்து ஒன்று நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.35 passengers crash road accident

மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டது.

இதில் பேருந்து உருக்குலைந்து மேற்கூரை தனியாகப் பெயர்ந்தது. பேருந்தில் பயணித்த 35 பேர் உயிரிழந்து விட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 20 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயங்களோடு மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: