Type to search

பத்து ஆண்டுகளுக்குப்பின் வீட்டுக்கு வந்த மீனாட்சி!

Tamil nadu

பத்து ஆண்டுகளுக்குப்பின் வீட்டுக்கு வந்த மீனாட்சி!

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

{ Meenakshi come home }

அரக்கோணத்தைச் சேர்ந்த இளம்பெண் மீனாட்சிக்கும் அவரின் தாய்மாமனுக்கும் கட்டாயத் திருமணம் நடந்துள்ளது. இதனால், வீட்டை விட்டு வெளியேறிய அவர், 10 ஆண்டுகளுக்குப்பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்தார்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம், தாலுகா, வளர்புரம் போஸ்ட், கிருஷ்ணாபுரம், பழைய காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரின் மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

மூத்த மகள் மீனாட்சி என்கிற நந்தினி. பத்தாம் வகுப்பு வரை படித்த இவருக்கும் இவரின் தாய்மாமனுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமண வாழ்க்கை நந்தினிக்கு கடும் துன்பத்தைக் கொடுத்தது. இதனால், வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆந்திரா, நகரியில் உள்ள உறவினர் வீட்டில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கும் பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார். ஒருகட்டத்தில் அவர், தன்னையே மறந்தார். ஆவடி ரயில் நிலைய பகுதியில் மனம் போல சுற்றித் திரிந்தார்.

22 வயது இளம்பெண் மீனாட்சி மீது பலரின் பார்வை விழுந்தது. கருணை உள்ளம் கொண்ட ஒருவர், ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு 1.7.2016-ல் ஆவடி, வீராபுரத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு மன அழுத்தத்துக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு மீனாட்சி முழுமையாக குணமடைந்தார். தன்னுடைய முழுவிவரங்களைக் காப்பகத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்ததோடு, வீட்டுக்குச் செல்ல விரும்புவதாகவும் கூறினார். தொடர்ந்து, மீனாட்சியை அவரின் குடும்பத்தினருடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags: Meenakshi come home

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

*மகளை கர்ப்பமாக்கியத் தந்தை!

*​கமல்ஹாசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது!

*பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

*13 முறை பாலியல் பலாத்காரம் செய்த பிஷப் மீது நடவடிக்கை கோரும் கேரள கன்னியாஸ்திரி

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares
Tags:

You Might also Like