Type to search

பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

India Head Line Tamil nadu

பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

Edappadi Palanisamy interviewed }

வளர்ச்சியை கருத்தில் கொண்டே சேலம் – சென்னை பசுமை வழிச் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டத்தால், சேலம், நாமக்கல், கரூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் அதிக பயன்பெறும் என்று கூறியுள்ளார்.

இத்திட்டதால், வேலை வாய்ப்பு பெருகும் என்றும், விபத்துக்கள் குறையும் என்றும், சேலம் – சென்னை இடையேயான தொலைவு குறைவதால், எரிபொருள் பெருமளவில் மிச்சப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் என தெரிவித்த முதலமைச்சர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்திட்டத்தை சிலர் எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார்.

இத்திட்டத்திற்காக நிலங்களை அளிப்பவர்களுக்கு அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாகவும், யாரையும் அச்சுறுத்தி நிலங்களைப் பெறுவதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இத்திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள் யார் மீதும் அரசு வழக்கு தொடுக்க வில்லை என்றும், அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றே கோரி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இத்திட்டத்திற்காக மலைகள் அழிக்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, இது கற்பனையான கேள்வி என தெரிவித்தார்.

Tags: Edappadi Palanisamy interviewed

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like