Type to search

குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்; காத்திருக்கும் கச்சநத்தம் பள்ளிக்கூடம்!

Tamil nadu

குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்; காத்திருக்கும் கச்சநத்தம் பள்ளிக்கூடம்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

{ Waiting Kachananam School }

கச்சநத்தம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

உயிருக்குப் பயந்தும் பாதுகாப்பு கருதியும் தங்களது பிள்ளைகளை வெளியூர் பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கின்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் சாதிவெறியர்களால் கடந்த மாதம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

கச்சநத்தத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை இயங்கி வருகின்றது.

இப்பள்ளிக்கு இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்து படித்துக்கொண்டிருந்தார்கள். இந்தப் படுகொலைக்குப் பிறகு திருப்பாச்சேத்தி ஆவாரங்காடு, மாரநாடு, கச்சநத்தம் கிராமங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

தொடக்கப்பள்ளி கச்சநத்தம் கிராமத்தில் இருப்பதால் இக்கிராமத்தைச் சுற்றியுள்ள மீனாட்சிபுரம், கச்சநத்தம் இன்னும் சில ஊர்களிலிருந்து படிக்க வந்துகொண்டிருந்தார்கள்.

இந்தாண்டு 18 மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆதிக்கசாதியினர் தங்கள் பிள்ளைகளை இந்த ஊர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

அதே நேரத்தில் கச்சநத்தம் கிராமத்தில் உள்ளவர்களும் பாதுகாப்பு கருதி இனி இந்த ஊரில் வாழ முடியாது என்று கருதி நகர்ப்புறங்களில் உள்ள பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்த்துவிட்டார்கள்.

தற்போது இந்தத் தொடக்கப்பள்ளி போலீஸார் தங்கியிருக்கும் இடமாக மாறியிருக்கின்றது. இரண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தை திறந்து வைத்து மாணவர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள்.

Tags: Waiting Kachananam School

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

*மகளை கர்ப்பமாக்கியத் தந்தை!

*கோவையில் கழிவு நீர் தொட்டி விஷவாயு தாக்கி இளைஞர் பலி!

*ஓரினசேர்க்கைக்கு ஆசைப்பட்டு ஆப்பு வாங்கிக்கொண்ட இளைஞர்!

*ஆடை, உணவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண்! (காணொளி)

*“எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!

*ஸ்டெர்லைட்டை மூடுவது தற்கொலையாம்! – போலிச் சாமியார் ஜக்கி அலறல்!

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 

 

 


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags:

You Might also Like