Type to search

ஸ்டெர்லைட்டை மூடுவது தற்கொலையாம்! – போலிச் சாமியார் ஜக்கி அலறல்!

Tamil nadu

ஸ்டெர்லைட்டை மூடுவது தற்கொலையாம்! – போலிச் சாமியார் ஜக்கி அலறல்!

Share

மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ராம்தேவை தொடர்ந்து சாமியார் ஜக்கி வாசுதேவ் சத்குரு களமிறங்கியுள்ளார்.Sleeping Sterlite! – Fake Sacred Jockey Scream!

தூத்துக்குடி போராட்டம் குறித்து அளித்த பேட்டி தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், சாமியார் ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டரில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது ‘பொருளாதார தற்கொலை’. தாமிர உருக்காலை குறித்து எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அளவில்லாத அளவுக்கு உள்ளதை அறிவேன்.

மேலும் நாம் நமக்குத் தேவையான தாமிரத்தை நாமே தயாரித்துக் கொள்ளவில்லை என்றால், சீனாவில் இருந்து தான் வாங்க வேண்டியது வரும். புவியியல் மாசுபாடுகள் சட்டப்படி சரி செய்யப்பட வேண்டும். மிகப்பெரிய வர்த்தகத்தை அநியாயமாக மூடுவது பொருளாதார தற்கொலை என்று கூறியுள்ளார்.

லண்டனில் வேதாந்தா நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலை சாமியார் பாபா ராம்தேவ் சந்தித்திருந்தார். அதன் பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில் அனில் அகர்வாலை புகழ்ந்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையில் சர்வதேச சதி இருப்பதாகவும் ஆலையை மூடக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், மற்றொரு சாமியாரும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆலைக்கு ஆதரவாக சாமியார்கள் பேசுவது மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags:

You Might also Like