Type to search

ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பு! – முதலமைச்சர்!

India Head Line Tamil nadu

ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பு! – முதலமைச்சர்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கில், அரசு ஒத்துழைப்பு தருவதில்லை எனறு கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.IGP full cooperation government – chief minister!

அதன் தொடர்ச்சியாக பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமி, திருடுபோன சிலைகளை மீட்பது அரசின் கடமை என்றும், தேவையான வசதிகளை செய்துதராமல் அரசு மாறாக செயல்படுவது ஏன் என கேள்விகளை முன்வைத்தார்.

இதனால் அவையில் காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கோரியபடி 320 காவலர்கள் உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

நீதிமன்ற வழக்கை சட்டப்பேரவையில் ஓரளவுக்கு தான் விவாதிக்க முடியும் என்று கூறிய முதலமைச்சர், பணியிட மாற்றம் என்பது அனைத்து ஆட்சியிலும் நடைபெறும் ஒன்றுதான் என்று கூறினார்.

திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் தான் திருடுபோன சிலைகள் அதிகளவு மீட்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் திருடுபோன சிலைகளை மீட்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: