Type to search

குழந்தையை விற்குமளவிக்கு மதுபோதையில் மிதந்த தாய்!

INDIA

குழந்தையை விற்குமளவிக்கு மதுபோதையில் மிதந்த தாய்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(drink after business child)

ஆந்திராவில் மது போதைக்கு அடிமையான ஒருவர், மனைவி மற்றும் குழந்தைகளை 5 லட்சம் ரூபாய்க்கு விற்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொவளகுண்டா பகுதியை சேர்ந்த மத்திலெட்டி – வெங்கடம்மா தம்பதியினருக்கு 4 பெண் குழந்தைகள்,  ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், மத்திலெட்டி தொடர்ந்து மதுபோதைக்கு அடிமையாகி, பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.

கடந்தாண்டு பிறந்த குழந்தையை, 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்ற நிலையில், தற்போது 15 லட்சம் ரூபாய் கடனாகி இருப்பதால், தனது மனைவி மற்றும் குழந்தைகளை, அவரது சகோதரருக்கு 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இதனால் கடந்த வாரம், குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெங்கடம்மா தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளிடம், நடந்த விவரங்களை கூறி வெங்கடம்மா புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்திலெட்டியை தேடி வருகின்றனர்.

tags;-drink after business child

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •