Type to search

ஜெயலலிதாவின் வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும்: புகழேந்தி

Tamil nadu

ஜெயலலிதாவின் வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும்: புகழேந்தி

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

Dinakarans supporter released minister Jayalalithaa hospital

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பேசிய வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய வீடியோக்கள் விரைவில் வெளியிடப்படும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் ஜெயலலிதா எழுதுவது போன்ற வீடியோக்களும் இருப்பதாக கூறியுள்ள அவர், விரைவில் அதனை வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.

இதற்கு முன்பாக ஜெயலலிதா மருத்துவமனையில் ஜூஸ் சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியிடப்பட்டது. இதை போல தற்போது மேலும் சில வீடியோக்களை வெளியிட தினகரன் தரப்பினர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் ஜெயலலிதா கைப்பட எழுதியதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேப்பர் ஒன்று வெளியிடப்பட்டது. ஆனால் அதில் மாதம் தவறாக இருந்ததால் அது போலி என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

Dinakarans supporter released minister Jayalalithaa hospital

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: