Type to search

மகளை கர்ப்பமாக்கியத் தந்தை!

INDIA CRIME Tamil nadu

மகளை கர்ப்பமாக்கியத் தந்தை!

Share
  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares

{ daughter pregnant reason Father }

திருப்பூர் மாவட்டத்தில், பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு மகளிர் நீதிமன்றம் 3 ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கின்றது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் எபிநேசன் துரைராஜ். வெல்டிங் தொழில் செய்து வந்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

குடும்பப் பிரச்சனையால் கணவன், மனைவி இருவரும் கடந்த சில வருடங்களாகவே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் மூத்த மகளை சங்கீதாவும், இளைய மகளை எபிநேசனும் வளர்த்து வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்பா எபிநேசனுடன் வசித்து வந்த இளைய மகளுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கின்றது.13 வயதேயான அந்தச் சிறுமிக்கு குழந்தை பிறந்த விவரம் உடனடியாக அரசாங்கத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிறுமிக்கு பிறந்த குழந்தையை சேலத்தில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தை பிறந்தது தொடர்பாக அந்தச் சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணையும் நடத்தினார்கள்.

அதில் கிடைத்த தகவல்கள்தான் அதிகாரிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்தது. அதாவது சிறுமியின் தந்தையான எபிநேசன் துரைராஜே, தான் பெற்ற மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியிருக்கின்றார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் சிறுமியின் தந்தைமீது வழக்கு பதிவு செய்தனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் மூன்று பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கானது திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் எபிநேசன் துரைராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு மொத்தம் மூன்று ஆயுள் தண்டனைகளும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கின்றது திருப்பூர் மகளிர் நீதிமன்றம்.

Tags: daughter pregnant reason Father

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    20
    Shares
Tags:

You Might also Like