Type to search

ரத்தம் குடிக்கும் காவலர்கள் இன்று 89 இடங்களில் ரத்ததானம்!

Tamil nadu

ரத்தம் குடிக்கும் காவலர்கள் இன்று 89 இடங்களில் ரத்ததானம்!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு காவல்துறையின் மாபெரும் ரத்ததான முகாமை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.bloody donate police guards today 89 place

ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இன்று தமிழ்நாடு காவல்துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ரத்ததான முகாம், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், 89 இடங்களில் நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்கிறார்கள். இந்த மாபெரும் ரத்ததான முகாமில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

டெல்லியில் 26.6.2018 அன்று நடைபெற்ற `பாஸ்போர்ட் சேவா திவஸ்’ விழாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் (m-Police App) செயலியை உருவாக்கிய தமிழ்நாடு காவல்துறையின் பணியைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரால் வழங்கப்பட்ட சான்றிதழை முதல்வர் பழனிசாமியிடம் இன்று காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்பம்) எம்.என்.மஞ்சுநாதா காண்பித்து வாழ்த்து பெற்றார்.

bloody donate police guards today 89 place

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: