Type to search

சென்னையில் புதிதாக 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்: மின்துறை அமைச்சர்!

Tamil nadu

சென்னையில் புதிதாக 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்: மின்துறை அமைச்சர்!

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

{ 20 power stations set Chennai }

சென்னையில் வரும் ஆண்டில் புதியதாக 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 26 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

புதியதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுபவர்கள், புதிய மின்மாற்றி அமைப்பதற்கு இடம் ஒதுக்காமல், வீடுகளை கட்டுவதால் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற மின் அழுத்தம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் மலைப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாத சூழலில் சோலார் வசதிகள் ஏற்படுத்தித்தரப்படுவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

Tags: 20 power stations set Chennai

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: