Type to search

மரம் நட்டு மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள்!

INDIA

மரம் நட்டு மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

(Students buying tree growth scores)

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் பள்ளியொன்று மரக்கன்றுகளை வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்களை வழங்கி வருகிறது.

சத்தீஸ்கரின் ராஜ் நந்த்காம் மாவட்டத்துக்கு உட்பட்டது ராய்ப்பூர். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு, அந்தப் பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் மரம் வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதன்படி, அந்தப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தப்பட்டனர். மேலும், அவர்களது வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளிலும், அந்த கிராமத்தின் பிற பகுதிகளிலும் மரம் வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக அந்த மாணவர்களுக்கு மா, வேம்பு, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, மாணவர்கள் மரக்கன்றுகளை நடத் தொடங்கினர்.  அவர்கள் மரக்கன்றுகளை ஒழுங்காக நடுகிறார்களா?  என்பதை கண்காணிப்பதற்காக வகுப்பாசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

9-ம் வகுப்பு படிக்கும்போது மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள், பின்னர் 10, 11, 12-ம் வகுப்புகள் என மாறிய நிலையிலும் அவற்றை பராமரிக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.

இவ்வாறு, மரங்களை ஒழுங்காக பராமரித்து வந்த மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு செய்முறை தேர்வில் போனசாக 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில், அந்த மரக்கன்றுகள் சிறிய மரங்களாக செழித்து வளர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

tags;-tudents buying tree growth scores

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares