Type to search

உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!

INDIA

உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

மூணாறில் கனமழையால் வீட்டை இழந்து உணவு, உறைவிடமின்றி 2 மூதாட்டிகள் பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.tears two abortions abandoned relationships

கேரள மாநிலம், மூணாறை சேர்ந்தவர் மாரியம்மாள் (65). இவரது மகன்களுக்கு திருணமாகி தனியாக வசித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்தவர் வெள்ளைத்தாய் (75). இவரது மகன்கள் வெளியூரில் வசிக்கின்றனர். தனித்தனியாக வசித்து வந்த இவர்களின் வீடு கனமழைக்கு முற்றிலும் சேதமடைந்தது. இதனால் தங்க இடமில்லாமல், உணவுக்கும் வழியின்றி பரிதவித்து வந்தனர். மகன்களை தேடி சென்ற மாரியம்மாளை மருமகள்களை விரட்டி அடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வேறு வழியின்றி தனது உடமையுடன் மூணாறு பேருந்து நிலையத்தில் மாரியம்மாள் தஞ்சமடைந்தார். இவரை போலவே வெள்ளைத்தாயும் பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்தார். கடந்த ஒரு மாதமாக இருவரும் பேருந்து நிலையத்திலேயே தங்கி, டிரைவர்கள் தரும் தொகையை வைத்து வயிற்றுப்பசியை போக்கி கொள்கின்றனர்.

மாரியம்மாள் கூறுகையில், ‘‘எனக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒரு மகன் மூணாறு அருகே மறையூரிலும், மற்றொரு மகன் சென்னையிலும் வசிக்கின்றனர். எம்.ஜி காலனி பகுதியில் தகரத்தால் ஆன செட்டில் வசித்து வந்தேன்.

மழையால் வீடு முற்றிலும் சேதமடைந்தது. மகன்கள் என்னுடைய நிலையைக் கண்டு உதவிக்கு வரவில்லை. மாறாக அடித்துத் துரத்தினர்,’’ என கண்ணீர் மல்க கூறினார்.

தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என 2 மூதாட்டிகளும் பஞ்சாயத்து அதிகாரிகளை அணுகியதாகவும், தங்குவதற்கு இடம் தரமுடியாது. வேண்டுமென்றால் முதியோர் இல்லத்திற்கு செல்லுங்கள் என அதிகாரிகள் கூறியதாக வேதனையுடன் தெரிவித்தனர். தங்களுக்கு அரசு வீடு கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: