Type to search

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?

India Head Line Tamil nadu

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

தமிழக அரசியலில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. தமிழக அரசியலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.successor politics! – happen? Not even?

உயர்நீதி மன்ற நீதிபதி கண்டிக்கக்கூடிய அளவிற்கு தமிழக அரசியலில் வாரிசு அரசியல் தழைத்தோங்கியுள்ளதா? என்ற ஆச்சரியம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள வாரிசு அரசியல் குறித்து ஓர் செய்தி தொகுப்பு…

successor politics! - happen? Not even?

அரசியல் வாரிசு என்றால் என்ன? என்பதற்கு நேர்மை, உழைப்பு, திறமை, சத்தியம், பொதுநலம் ஆகியவற்றை முன்னிறுத்தும் தலைவர்களை தங்களுக்கு முன்னிருத்தி தங்களுக்கான அரசியல் முன்னுதாரணங்களாக ஆக்கிக் கொண்டனர் சில தலைவர்கள். குறிப்பாக, நாட்டின் சுதந்திர வேட்கை கொடிகட்டிப்பறந்த காலத்தில் தீரர் சத்தியமூர்த்தியின் அரசியல் வாரிசாக திகழ்ந்தார் காமராஜர். காந்தியடிகளின் அரசியல் வாரிசாக தன்னை காட்டிக் கொண்டார் ஜவஹர்லால் நேரு அவர்களையே தன் அரசியல் குருநாதராக அறிவித்தும் கொண்டனர்.

அன்றைக்கு குருநாதர்களுக்கும், சீடர்களுக்கும், அரசியல் வாரிசுகளுக்கும் அந்த அளவு அரசியல் பக்குவமும், முதிர்ச்சியும் இருந்தது. அரசியல் வாரிசு என்பதற்கு அர்த்தமும் புரிந்தது. மக்களும் மரியாதைக்குரிய அரசியல் வாரிசு என்ற விஷயத்தை போற்றி பூஜித்தனர் ஆனால், இன்றைக்கு ’அரசியல் வாரிசுக்கு’ முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விமர்சனம் செய்யும் அளவிற்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

successor politics! - happen? Not even?

திமுக சுதந்திர இந்தியாவில் அரசியல் வாரிசு வேறுமாதிரியாக மாறியது. நேரு மறைவிற்குப்பிறகு இந்திராகாந்தி பிரதமரானதில் இருந்து இந்தியாவில் வாரிசு அரசியல் துளிர் விட்டது. தமிழகத்தில் குடும்ப அரசியல் என்றதும் முதலில் அனைவரின் நினைவுக்கு வருவது திமுக தலைவர் கருணாநிதி தான். அவரது அரசியல் வாரிசாக மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டு இன்றைக்கு கட்சியின் செயல் தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ளார். தனது மூத்த மகன் அழகிரியை மத்திய அமைச்சராக்கினார்.

successor politics! - happen? Not even?

குடும்ப பிரச்சனையில் இன்றைக்கு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தனது இலக்கிய வாரிசாக உருவெடுத்த வந்த கனிமொழியை எம்,.பி.யாக்கினார். முன்பு டில்லிக்கு கருணாநிதியின் மனசாட்சியாக செயல்பட்டு வந்த அவரது மருமகன் முரசொலி மாறன் என்ற நிலைத்தாண்டி இன்றைக்கு கனிமொழி என்றாகிவிட்டது. முரசொலி மாறன் மறைவுக்கு பின்பு அவரது வாரிசாக மகன் தயாநிதி மாறன் கொண்டுவந்தார்.

டில்லிக்கு கனிமொழி தமிழகத்திற்கு ஸ்டாலின் என்ற நிலையை கருணாநிதி ஏற்படுத்தினார். இன்றைக்கு தலைமுறை தாண்டி வாரிசு அரசியல் கருணாநிதி குடும்பத்தில் உருவெடுத்துள்ளது, குறிப்பாக, அரசியல் ஆர்வமில்லாமல் சினிமாத்துறையில் ஈபாடுள்ள உதயநிதி ஸ்டாலினை, கட்சியில் ஸ்டாலினின் வாரிசாக முன்னிலைப்படுத்தும்படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு ஸ்டாலின் மனைவி துர்காவும் அவரது வீட்டில் பவர் சென்டராகிலிட்டார்.

திருமணமான தொடக்கத்தில் கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்டாலின் மருமகன் சபரீசன், அவரது மானார் ஸ்டாலினுக்காக முகநூல், டிவிட்டர் தொடங்கி சமூக வலைத்தளங்கள், ‘நமக்கு நாமே’ திட்டம் ஆகியவற்றை உருவாக்கினார். தினமும் ஸ்டாலின் என்ன உடை அணிய வேண்டும்? இன்றைக்கு எதைப் பற்றி பேச வேண்டும் என்பது உட்பட சபரீசன் தலைமையிலான குழுதான் பரிந்துரைக்கிறது.

எனவே, இனி வரும்காலத்தில் திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு மகன் உதயநிதி, டில்லிக்கு மருமகன் சபரீசன் என்று கட்சியினரே சொல்லும் அளவிற்கு உதயநிதியும், சபரீசனும் இன்றைக்கு மறைமுக அரசியல் இருந்து நேரடி அரசியலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

successor politics! - happen? Not even?

இதேபோல், திமுக மாவட்ட செயலாளர்களும் தங்களது வா/ரிசுகளை களமிறக்கி குடும்ப அரசியலை ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதிமுக தனது கட்சியில் .வாரிசு அரசியலே இல்லை என்று எம்ஜிஆர் தெளிவுபடுத்தியிருந்தாலும் ‘மதுரையில் செங்கோல் கொடுத்தார் எம்ஜிஆர் எனவே, நானே அரசியல் வாரிசு!’ என்று சூளுரைத்து எம்ஜிஆரின் வாரிசானார்.

ஜெயலலிதா எம்ஜிஆர் இறக்கும் வரை அமைதியாக அவருடன் இல்லறம் நடத்தி வந்த வி.என். ஜானகி… எம்ஜிஆரின் மனைவி என்ற அடையாளத்துடன் ஜெயலலிதாவிற்கு எதிராக அரசியல் களமிறங்கினார். ஜெயலலிதா தனது அரசியல் வாரிசாக யாரையும் கைக்காட்டவில்லை, ஆனால், அவரது மறைவிற்கு பின்பு அவரது அரசியல் வாரிசாக பலர் வந்துள்ளனர். குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ‘என் அத்தை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்று புதிய புயலை கிளப்பினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.

மற்றொருபுறம் தன்னை ஜெயலலிதாவாகவே உருவகப்படுத்திக்கொண்டும், அவரின் உடன்பிறவா சகோதரி, வாழ்க்கை முழுவதும் ஜெயலலிதாவுக்கு தோழியாக இருந்து பணிவிடை செய்தவள் என்ற அடையாளங்களுடன் ஜெயலலிதா வாரிசாக களமிறங்கினார் சகிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும்,. அவரது வாரிசாக டிடிவி தினகரன் களமிறங்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார், அம்மா இருக்கும் போதே நான் முதல்வராக இருந்தவன் எனவே, அம்மாவின் வாரிசு நான் தான் என்று துணை முதல்வர் ஓ,பன்னீர் செல்வம் ஒருபுறம் போர்க்கொடி தூக்கினார்.

பின்பு, அதிமுகவில் ஐக்கியமான பின்பு அவரது மகன் ரவீந்திரநாத்தை ‘புரட்சித் தலைவி அம்மா பேரவை’யின் தேனி மாவட்ட செயலாளராக்கி தனது அரசியல் வாரிசை அறிமுகப்படுத்தியுள்ளார். அதேபோல், அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகன் ஜெயவர்த்தனுக்கு புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலவாளர் பெற்று கொடுத்துள்ளார், இதுபோல், அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் தங்களது வாரிசுளுக்கு பதவி பெற்றுத் தந்து தங்களது அரசியல் வாரிசை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தேமுதிக தமிழகத்தில் உள்ள திராவிட கட்சியில் மட்டுமல்ல பிற கட்சிகளிலும் வாரிசு அரசியல் தழைத்துள்ளது. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவரது மைத்துனர் அரசியல் வாரிசாக நேரடியாக களத்தில் உள்ளனர். தமாகாதமிழகத்தில் இருந்து பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டவர் ஜி.கே.மூப்பனார். அந்தளவிற்கு அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மூப்பனார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி நடத்தினார், அவரது மறைவிற்கு பின்பு தமாகாவை மீண்டும் கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைத்த அவரது மகன் ஜிகே வாசன் தற்போது, மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நடத்தி வருகிறார்.

காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையில் தற்போதுள்ள மூத்த தலைவர்கள் பெரும்பாலோனோர் வாரிசுஅரசியலை ஊக்குவித்துள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப,.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவின் மகன் திருமகன் இப்படி காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்து அடிமட்டம் வரை வாரிசு அரசியல் உள்ளது. அரசியல் கட்சிகளில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாததாகிவிட்டது.தற்போதுள்ள தலைமுறையைத் தாண்டி அடுத்த தலைமுறை வாரிசுகளும் தேர்தல் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கிறார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares
Tags:

You Might also Like